June 19, 2021

ஆவடியில், தொழிற்சாலைகளில் பணியாற்றும் 15,000 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாமை அமைச்சர் ச.மு.நாசர் துவக்கி வைத்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகரில் உள்ள எச்.வி.எப்- ஓ.சி.எப் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் 15.000 மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கயாக சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஒரு வாரத்திற்கு நடைபெற உள்ளது. இதனை, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அவர்கள் முகாமை துவக்கி வைத்து ஆய்வு செய்து பார்வையிட்டார். அருகில், ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன், மாநகரப் பகுதி கழக பொறுப்பாளர் ஆவடி ஜி.நாராயண பிரசாத், உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed