June 17, 2021

கரோனா வைரஸ் காரணமாக வாடகைக்கார் மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கபட்டது…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் சார்பில், வாடகைக்கார் மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு உதவிகள் வழங்கபட்டது. கரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தில் பெருமளவில் பரவி வரும் நிலையில் தொற்று பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்துள்ள நிலையில் கார் மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப்
பட்டய தலைவர் ஆடிட்டர் தங்கதுரை தலைமையில் நிகழ்ச்சியை அறந்தாங்கி டி.எஸ்.பி ஜெயசீலன் துவக்கி வைத்தார். உடன் அறந்தாங்கி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சேகர் இருந்தார்.

அறந்தாங்கி பகுதியில் உள்ள வாடகைக்கார், வேன் ஓட்டுனர்கள் என சுமார் 300 நபர்களுக்கு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் காய்கறிதொகுப்பு பையை அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் மோகன்குமார்,
பட்டய பொருளாளர் புவனா, செந்தில்குமார், ஐடியல் பள்ளி தாளாளர் கவிஞர் சேக்சுல்த்தான், கிருஷ்ணகுமார், பெருங்காடு சிவசுப்பிரமணியன்,

தி.மு.க.நகரசெயலாளர் ஆனந்த், பல் சீரமைப்பு நிபுணர் டி.மணிகண்டன், பத்திர எழுத்தர் சண்முகவேல், தொட்டிச்சி அம்பாள் லோகநாதன், கமலாம்பிகை பெட்ரோல் பங்க் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ..உலகநாதன், மணிமாறன் ஹார்டுவேர்ஸ் விஜயசுந்தர், ஜனதா எலக்ட்ரிக்கல்ஸ், கண்ணன், பெயின்ட் கடைசெல்வம், செல்வகணபதி, தியாகராஜன், உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள்
உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *