June 21, 2021

திருநெல்வேலி மாவட்டத்தில்,கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு, பாக்கெட் சானிடைசர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்…

1 min read

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு, மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி போன்ற மருத்துவ பாதுகாப்பு பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

இதன் அடிப்படையில், பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தங்கள் கைகளை‌ அடிக்கடி‌ சுத்தம் செய்து நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள பாக்கெட் சானிடைசர் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அனைவரும் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் அவர்கள் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) சுப்பாராஜூ அவர்கள் மற்றும் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா ஆகியோரிடம் இன்று வழங்கினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed