June 19, 2021

கடையநல்லூர் காவல் துறையினர், சாலையில் இருந்த பள்ளத்தை சீரமைத்தால், பொதுமக்கள் மகிழ்ந்து பாரட்டினர்…

1 min read

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடையநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில், வெகுநாட்களாக பெரிய பள்ளம் ஒன்று இருந்து வந்தது. அதன் காரணமாக அவ்வழியே செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தொடர்ந்து வெகு நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அதனை கண்டு அந்த சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய முடிவு எடுத்தனர் அதனைத் தொடர்ந்து, சார்பு ஆய்வாளர் விஜயகுமார், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், முருகன் மற்றும் காவலர்கள் ராமஜெயம், ரஷீத் மற்றும் குமார் ஆகியோர் இணைந்து சாலையில் ஓரமாக கொட்டிக் கிடந்த ஜல்லி கற்களை அள்ளி கொண்டு பள்ளத்தை சரி செய்தனர்.

காவல்துறையினரின் இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed