June 19, 2021

தமிழக முதல்வரிடம், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் மே-2021 மாதம் ஊதியம் வழங்க வேண்டி, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வேண்டுகோள்…

1 min read

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமுல்படுத்தி உள்ளது.
இது மே மாதம் என்பதால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் முந்தைய அதிமுக அரசு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. வருடத்துக்கு 11 மாதம் மட்டுமே சம்பளம் கொடுப்போம் என்று சொல்லி இவர்களை வேலைக்கு சேர்க்கவில்லை.
அது போல அரசாணையும் கிடையாது.
ஆனாலும், ஒவ்வொரு வருடமும் மே மாதம் சம்பளம் கொடுக்காமல் 9 மாதத்தில் இதனால் இவர்கள் ரூபாய் 60ஆயிரம் இழந்து தவிக்கிறார்கள். கடைசிவரை இவர்களுக்கு மே மாதம் சம்பளமும் கொடுக்காமல், பணிநிரந்தரம் செய்யாமலும் பழிவாங்கி விட்டது முந்தைய அதிமுக அரசு. இப்போது இது இவர்களுக்கு 10 வது மே மாதம் நடக்கிறது.
அதே வேளையில் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிவிட்டது.
ஆனாலும், அதிமுக அரசின் முடிவையே இன்னும் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து வருகிறார்கள்.
இதனால் புதிய முதல்வர் உத்தரவிட்டால் மட்டுமே மே மாதம் சம்பளம் கிடைக்கும் என பகுதிநேர ஆசிரியர்கள் நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து வருகிறார்கள்.

இது குறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சி.செந்தில்குமார் கூறியது; இப்போது பள்ளி கல்வித்துறையில் 6,156 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களுக்கான மே -2021 மாதம் ஊதிய நீட்டிப்பு ஆணையை முதன்மை செயலாளர் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார். இவர்களை போலவே பகுதிநேர ஆசிரியர்களுக்கும் மே-2021 மாதம் ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் கருணையுடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் மே மாதம் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்கள் பெறத்தக்க வகையில் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்க வேண்டுகிறோம்.

துறை ரீதியாக ஒருபோதும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் கொடுக்க இதற்கு முன்பு பரிந்துரை செய்தது கிடையாது.
நேரில் வந்து முறையிடுவதற்கு இப்போது போதிய நேரமும் இல்லை என்பதால் ஈமெயில் மூலமாக கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கருணைக்கு அனுப்பி வேண்டி கொள்கிறோம்.
ஏற்கனவே பணி நிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையின்படி நாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்து வருகிறோம்.
அதற்கு முன்னோட்டமாக பெரும் சுமையாக இருக்கும் மே மாதம் சம்பளம் இம்முறை திமுக ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்க மாண்புமிகு முதல்வர் அவர்களை மீண்டும், மீண்டும் வேண்டுகிறோம் என்றார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed