June 21, 2021

சென்னையில்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக பெண் காவல் ஆய்வாளர்,அரசு மருத்துவ மனைகளின் முன்பு தொடர்ந்து அரிசி கஞ்சியை அளித்து வருகிறார்…

1 min read

கொரோனா தொற்று காரணமாக பலர் வாழ்வாதரம் இழந்தவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் அரசு மருத்துவ மனைகளின் முன்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தொடர்ந்து அரிசி கஞ்சியை காலை உணவாக வழங்கி வருகிறார்.


சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆய்வாளராக இருப்பவர் காஞ்சனா. இவர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளின் முன்பு நாள்தோறும் 500 நபர்களுக்கு அரிசி கஞ்சி வழங்கி வருகிறார்.

காலையில் பணிக்கு செல்வதற்கு முன்பு அரசு மருத்துவ மனைகளின் முன்பாக அரிசி கஞ்சியை வழங்கிய பின் பணிக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். கொரோனாவின் முதல் அலையின் போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தனி ஆளாக அடக்கம் செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed