June 21, 2021

விருதுநகர் மாவட்ட நடிகர் விஜய் “மக்கள் இயக்கத்தின்” சார்பில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த, மக்களுக்கு தொடர்ந்து தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது…

1 min read

விருதுநகர் மேற்கு மாவட்டம், நடிகர் விஜய் “மக்கள் இயக்கத்தின்” சார்பாக, நடிகர் விஜய் அவர்களின் ஆலோசனையின் பேரில்,
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ புஸ்ஸி N. ஆனந்த் அவர்களின் மேற்பார்வையில், ஜூன் 1- தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை தினந்தோறும், கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு, தினமும் 100 நபருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து முதல் நாளாக இன்று
இராஜபாளையம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் M.நாகசங்கர் அவர்களின் தலைமையில் இன்று சரியாக மதியம் ஒரு மணி அளவில் உணவு வழங்கப்பட்டது.
உணவு வழங்கியவர்கள்: விருதுநகர் மாவட்ட மகளிரணி தலைவி S.ஜெகா விஜய் , மற்றும் மகளிரணி மாவட்ட செயலாளர் P.பாண்டீஸ்வரி,

S.V..சிவா விஜய் விருதுநகர் மேற்கு மாவட்ட தொண்டரணி துணைத் தலைவர்,
G.பூமாலை விஜய் விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர்,
M.ராமராஜ் இராஜபாளையம் நகர துணைத்தலைவர், S.முத்துக்கண்ணன் விருதுநகர் மேற்கு மாவட்ட தொண்டரணி துணை செயலாளர், G.நாராயணன், ஆகியோர் வழங்கினார்கள்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed