September 24, 2021

குற்றாலத்தில், பசியில் வாடிய குரங்குகளுக்கு, உணவு அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

1 min read
Spread the love

இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால மலை அடிவாரத்தில் ஊரடங்கு காரணத்தால் பொதுமக்களின் நடமாட்டம் முற்றிலும் இல்லாத காரணத்தினால், அங்கு வாழும் குரங்குகள் உணவின்றி தவித்து வந்தன.

அதனை அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்கள் குரங்குகளுக்கு நேரில் சென்று உணவளித்தார். மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில்; ஊரடங்கு முடியும் வரை குரங்குகளுக்கு காவல் துறையின் சார்பில் உணவு அளிக்கப்படும் எனவும், பொதுமக்கள் தாங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள விலங்குகளுக்கு உணவு அளித்து உதவுங்கள் எனவும் அவர் கூறினார்.

காவல் கண்காணிப்பாளரின் இத்தகைய மனிதநேயமிக்க செயலுக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed