June 19, 2021

மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், மக்களை தொற்றில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து, கபசுர நீர் வழங்கப்படுகிறது…

1 min read

மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அனுப்பம்பட்டு ஊராட்சி மக்கள் மேலும் தொற்றின் பாதிப்பில் சிக்காமல் இருக்க வேண்டி, அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணியம்மாள் அறிவுறுத்தலின்படி, அனுப்பம்பட்டு ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம்களும், தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டது.

மேலும், முதல்கட்ட தற்காப்பு நடவடிக்கையாக ஊராட்சி முழுவதும் தூய்மை படுத்தப்பட்டு, மக்கள் விழிப்புணர்வு பெறும் வகைகள் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரங்கள் செய்தும் வருகின்றனர். மேலும், மீஞ்சூர் வட்டார சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேஷ் அவர்களின் ஆலோசனையின் பேரில், அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் அவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, ஊராட்சி முழுவதும் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் தயார் செய்து வழங்கி வருகிறார்.

அதன்படி, இரண்டாவது கட்டமாக கபசுர குடிநீரை தயாரித்து கடந்த 3 நாட்களாக வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதை காலை உணவுக்கு முன்பாக, மக்கள் அருந்த வேண்டும் என்ற ஒரே காரணத்தில், கபசுர குடிநீர் தயாரிக்கும் பணி காலை 4:00 மணிக்கு, கூட்டுறவு சங்கத் தலைவர் உமா மகேஸ்வரன், கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் ராமநாதன், ஊராட்சி பணியாளர்கள் ஆனஸ்ட், சந்துரு, சகுந்தலா ஆகியோர் முன்னின்று தயாரித்து, மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் மூலமாக, காலை 7 மணிக்கு முன், இந்த கபசுரக் குடிநீரை ஊராட்சி மக்களுக்கு வழங்குகின்றனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed