June 19, 2021

ராஜபாளையம் அரிசி வியாபாரிகள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு, 3 லட்சத்திற்கான காசோலையை, எம்எல்ஏ தங்கபாண்டியனிடம் வாங்கினர்…

1 min read

இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சி மற்றும் தளவாய்புரம் ஊராட்சியை சார்ந்த அரிசி வியாபாரிகள் சங்கத்தினர்கள் இன்று ரூபாய் 3 லட்சம் காசோலையை எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்களிடம் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ வியபாரிகளை பாராட்டி நீங்கள் கொடுத்த இந்த பணத்தை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புவதாகவும் மேலும், திமுக ஆட்சி உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும், மேலும் கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க அரிசி கொடுத்ததற்கும் நன்றி கூறினார். இந்நிகழ்வில் செட்டியார்பட்டி அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஆர்.ஆனந்தன் செயலாளர் டி.தங்கராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed