September 24, 2021

எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைபேர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்…

1 min read
Spread the love

தமிழக அரசு உத்தரவின்படி கொரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கையாக,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சியில், 18 வயது மற்றும் 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார் தலைமையில் ஊராட்சி சேவை மைய கட்டிட வளாகத்தில் நடை பெற்றது.

பின்னர் பெரியப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி மாத்திரைகளை வழங்கினர்.

இதில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயலட்சுமி குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் மேனகாபிரேம் ராஜ், வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், ஜெயா செந்தில்குமார்,
உமா வினோத், தணிகாசலம், செல்வகுமார், திவ்யாவைரம், சரசு வெங்கடேசன், ஊராட்சி செயலர் பொன்னரசு, நீதி என்கிற செல்வகுமார், ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் – இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed