June 19, 2021

பொன்னேரியில் போலீசார் தீவிர வாகன சோதனை, முகக்கவசம் அணியாமல் வந்த இளைஞர்களுக்கு அண்ணா சிலையை 10 முறை சுற்றி வர செய்து நூதன தண்டனை…

1 min read

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர கடந்த 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், டிஎஸ்பி கல்பனா தத் அவர்களுடைய மேற்பார்வையில், பொன்னேரி இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகன சோதனையை முடுக்கி விட்டனர். மேலும் பொன்னேரி முழுவதும் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலமும் இரண்டு சக்கர வாகனங்களில் நடமாடும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரமும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் பூமியை சுற்றி பல இடங்களில் சாலைகளில் தடுப்பு அமைத்து மரண சோதனை செய்து வருகின்றனர். பழைய பேருந்து நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக வந்த வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

அப்போது அங்கு சில இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் நடந்து வந்தனர். அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கொரோனா குறித்த பயமே இல்லாமல் முகக்கவசம் அணியாமல் வந்ததை கண்டித்தனர். முகக்கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் விதத்தில் அந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை அளித்தனர்.

” இனிமேல் வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவோம் ” என கூறிக்கொண்டே அந்த இளைஞர்களை பத்து முறை அண்ணா சிலையை சுற்றி ஓட விட்டனர். போலீசாரின் நூதன தண்டனை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed