June 21, 2021

ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டனர்…

1 min read

இராஜபாளையம் தொகுதியில் சேத்தூர் மற்றும் தேவதானம் பகுதியில் மழையினால் சாய்ந்த நெற்பயிர்களையும் நெல் கொள்முதல் நிலையத்தையும் மற்றும் சாஸ்தா கோவில் அணைப் பகுதியையும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களும், தங்கப்பாண்டியனன் எம்.எல்.ஏ அவர்களும் இன்று (05.06.2021) மாலை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் எம் எல் ஏ அவர்கள் , மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நெல் கொள்முதல் நிலையத்தில் தினந்தோறும் 800 கிலோ நெல்கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனை 1000 கிலோவாக உயர்த்த வேண்டுமெனவும் மேலும் சாஸ்தா கோவில் அணையை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
அதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் நெல் கொள்முதல் நிலையத்தில் தினந்தோறும் 1000 கிலோ கொள்முதல் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் துணை ஆட்சியர் தினேஷ்குமார் சாத்தூர் கோட்ட வருவாய் அலுவலர் புஷ்பா அக்ரி துறை இணை இயக்குனர் உத்தண்டராமன் சங்கரநாராயணன் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தேவதானம் கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட் மற்றும் கழக நிர்வாகிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed