June 21, 2021

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பழங்குடி கிராம மக்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர்…

1 min read

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கடந்த மாதத்திலிருந்து தொடர்ந்து ஊரடங்கு அறிவித்துள்ளது.

இந் நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அமைந்துள்ள கள்ளுக்கடை மேடு, ராஜரத்தினம் நகர், செஞ்சி அம்மன் நகர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி கிராம மக்கள் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல், வருவாய் இன்றி வாழ்வாதாரம் இழந்து வாடி வருகின்றனர்.

இதனைக் கண்ட, பழவேற்காடு பகுதி தன்னார்வலர்கள் இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், சுவையான உணவு தயார் செய்து வழங்கி வருகின்றனர். சுமார் 700 பேருக்கு இந்த உணவினை தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, சமீனா டீ ஸ்டால் முருகன் தலைமையில் காட்டூர் ராஜா, கந்தன், வெங்கடேசன், மூர்த்தி உள்ளிட்டவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களில், வீடு, வீடாக தேடி சென்று உணவுகளை வழங்கி வருகின்றனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed