June 17, 2021

போரூரில், தென்சென்னை மாவட்ட, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது…

1 min read

தென் சென்னை மாவட்ட, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மதிய உணவு, கபசுர குடிநீர், மற்றும் மருத்துவ உபகரணங்கள் போரூர் ரவுண்டானா அருகில் மக்களுக்கு வழங்கப்பட்டது.

மாநிலத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் கழுகு கே.ராஜேந்திரன், போரூர் ஜனா, A.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காவல்துறை துணை ஆணையர் J.மகேஷ், உதவி ஆணையர் பழனி, இன்ஸ்பெக்டர் ரவிகுமார், மருத்துவர் பாரா ஹோம் கேர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட தோழர்கள் எம்.டி.இராமலிங்கம், ராஜ் டிஜிட்டல் எஸ்.யுவராஜ், P.பார்த்திபன், சந்திர பாலாஜி, அருண், நிவாஸ், S.ஜெயகுமார், P.பவன் குமார், கழுகு ஃ பைசுதீன், N.பவன் குமார், போரூர் எக்ஸ்ரே சன்முகம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்
மேலும் இந்த நிகழ்வில் போக்குவரத்து காவல்துறை நன்பர்களுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *