September 24, 2021

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் அவர்களுக்கு பிரிவு உபசார விழா சிறப்பாக நடைபெற்றது…

1 min read
Spread the love

தென்காசி மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சுகுண சிங் அவர்கள் தற்போது பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதனை முன்னிட்டு அவருக்கு பிரிவு உபசார விழா மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சமீரன் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் அவர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed