June 21, 2021

ஒன்றிய அரசு, லட்சத்தீவில் ஒத்திகை பார்க்கிறதா…

1 min read

உலகிலேயே மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் வரவுள்ள இந்தியாவில், பல இனத்தவரும், பல மொழி பேசக் கூடியவர்களும், ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் வாழக்கூடியதை பார்த்து உலகமே ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தியாவில் உள்ள மக்கள் இனத்தாலும், மொழியாலும் பலவிதமாகப் பிரிந்து கிடந்தாலும் ஒற்றுமையுடன் இருக்கக்கூடியவர்கள் என்பதை உலகிற்கு பறை சாற்றிக் கொண்டிருக்கும், இந்த நேரத்தில் சில ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியால் அந்த ஒற்றுமைக்கு உலை வைக்கும் வேலைகள் பல நிலைகளில் நடந்து கொண்டிருப்பதை நினைத்தால் நமக்கு மனம் பதறுகிறது.

அதில், ஒரு உதாரணம் தான் தற்போது கேரளாவை ஒட்டியுள்ள லட்சத்தீவில் நடக்கக்கூடிய அடக்கு முறைக்கு நிகரான சட்ட திட்டங்கள் நடைமுறைபடுத்திக் கொண்டிருப்பது. லட்சத்தீவில் நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளை பார்த்து லட்சத்தீவு பாஜக நிர்வாகிகளே எதிர்த்துக் குரல் கொடுக்கும் அளவிற்கு அங்கு நிலைமை உள்ளது. அது மட்டுமல்லாமல் சோனியா காந்தி முதல், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கேரள முதல்வர் பினரயி விஜயன், உட்பட பல தலைவர்கள் லட்சத்தீவில் நடக்கக்கூடிய அடக்குமுறை சட்டதிட்டங்களுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், அங்கே எந்த ஒரு உத்தரவுகளும் திரும்பப் பெறப்படவில்லை, இதையெல்லாம் உற்று நோக்கினால், இந்தியாவில் உள்ள தென் மாநிலங்களில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டங்களை தான், லட்சத்தீவில் ஒத்திகை பார்க்கப்படுகிறதோ.. என நாம் நினைக்கத் தோன்றுகிறது.

இந்தியா எனும் மாபெரும் நாட்டில் யூனியன் பிரதேசங்கள் பல உள்ளன. அதில் முக்கியமானவை இலட்சத்தீவுகள் அதேபோல் இந்தியாவில் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன அதில் முக்கியமானவையும் லட்சத்தீவுகள். லட்சத்தீவுகள் என்பது வேறு எதுவும் இல்லை இங்கு பலருக்கும் மிக விரிவாக சொல்ல வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்தில் லக்ஷதீப் (lakshadweep islands )ஐலந்து என்று கூறப்படுபவை தமிழில் லட்சத்தீவுகள் எனப்படுகிறது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த லட்சத்தீவுகள் ஒரு காலத்தில் சென்னை மாகாணத்தின் கீழ் இயங்கியது என்று, இந்த லட்சத்தீவு ஆனது 32.62 கி.மீ சதுரப் பரப்பளவை கொண்டது. இதில் 36 தீவுகள் உள்ளன, இப்பொழுது லட்சத்தீவின் சிறப்புகளையும் மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளையும் காண்போம்;

  1. சுற்றுலாத்தலங்கள் என்றாலே மதுபானங்கள் அளவுகோல் இன்றி கிடைக்கும் என்பதே நம் அனைவரின் கருத்து ஆகும் ஆனால் லட்சத்தீவுகளின் அப்படியில்லை அனைத்து இடங்களிலும் மதுபான பாட்டில்கள் கிடைக்கவும், அருந்தவும் தடை உள்ளன. ஏனெனில் அதற்கு என்று தனியாக ஒரு சில சிறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு மட்டுமே மதுபான பாட்டில்கள் மது அருந்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
  2. லட்சத்தீவு காணாதவர்களுக்கு அதன் அழகை கூற வேண்டுமென்றால் லட்சத்தீவுகளின் கடற்கரையில் ஒன்று போதும் லட்சத் தீவின் கடல் நீரானது கடலுக்குள் ஓடும் மீன்கள் வெறும் கண்ணால் பார்க்கும் அளவிற்கு தெளிவாகவும் மற்றும் அதனுள் படர்ந்திருக்கும் பவளப்பாறைகளை காணும் அளவிற்கு தெளிவாக இருக்கும், கடற்கரையில் உள்ள மண் தங்கப் போர்வையை போற்றிய படியும் அதற்கு மேல் பச்சை பசேல் என்று அதன் இயற்கை மரங்களும் செடிகளும் கொடிகளும் நம்மால் காணமுடியும்,
    வார்த்தைகளால் கேட்கும்பொழுது சொர்க்கத்தை மண்ணுலகில் விட்டுச் சென்றது போல் நம்முள் உணர்ச்சிகள் பொங்கி எழுகின்றன, அந்த லட்சத்தீவின் கடற்கரைகளை காண்பதற்கு நம் கண்கள் ஏங்குகின்றன. ஆனால் இந்தியாவின் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை பட்டியலில் இலட்சத்தீவுகள் இல்லை என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரியது.
  3. அங்கு வாழும் மக்களுக்கு நில பரப்பு குறைவு என்பதால் கடலும் கடல் சார்ந்த தொழில்களும் பிரதானமாக உள்ளன, மேலும் நாம் அனைவரும் முக்கியமாக கவனிக்க வேண்டியது அங்கு வாழும் மக்களில் அதிகமானோர் நம் இஸ்லாமிய சகோதரர்களே என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன
    இந்திய அரசின் சட்டத்தின்படி வேறு எவரும் லட்சத்தீவில் சென்று நிலங்களை வாங்க இயலாது எனவே அங்கு வாழும் மீனவ குடும்பங்களே அவர்களுக்குள் கை மாற்றிக்கொள்வார்கள்
    நான் கூறியது வெறும் 3 எடுத்துக்காட்டு புள்ளி விவரங்கள் மட்டுமே லட்சத்தீவு பற்றி இந்த எடுத்துக்காட்டில் கூறப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் இன்று அமலில் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை மேலும் இந்த இயற்கை அழகும் அங்கு வாழும் மக்களும் இருப்பார்களா வரும் நாட்களில் என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை.

நம் இந்தியாவின் சொர்க்கபூமி அழியப்போகிறதா காரணம் என்ன?
இந்த லட்சத்தீவு ஆனது யூனியன் பிரதேசம் என்பதால் அதற்கென்று தனியாக முதலமைச்சர் இல்லை ஒரு எம்.பி மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீசர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அல்ல மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்படுவர், இந்த அட்மினிஸ்டர்ட் ஆபீசர் என்னும் பதவிக்கு நன்கு அட்மினிஸ்ட்ரேஷன் தெரிந்த வரும் படித்த வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆபீஸர் களை நியமிப்பது பொதுவாக இருந்து வந்தன , ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை தினேஷ்வர் ஷர்மா இன்னும் ஐ பி எஸ் ஆபிஸர் நீண்டகாலமாக அட்மினிஸ்ட்ரேட்டர் ஆபீஸராக அங்கு பணியாற்றி வந்தார் யார் இந்த தினேஷ்வர் ஷர்மா இன்டலிஜென்ஸ் பீரோ விற்கு சீப்பாக(chief), மேலும் ஜம்மு காஷ்மீர் அசாம் போன்ற இக்கட்டான பிரச்சனைக்குரிய இடங்களில் வெகு சிறப்பாக பணியாற்றியவர்
இந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு யார் இங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக நியமிக்கப்படுவர் என்று வெகு ஆவலாக அனைவரும் காத்திருந்தனர்.

ஆனால், ஒரு ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அட்மினிஸ்றட்டர் ஆக நியமிக்கப்படுவதற்கு பதில் ஒரு அரசியல்வாதி அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக நியமிக்கப்பட்டார், அது பிரஃபுல் கோடா பட்டேல் (praful khoda patel) என்னும் வட இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இருக்கும் இடத்தில் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது ஏனெனில் இங்கு வந்தும் தான் ஒரு சர்ச்சை நாயகன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். யார் இந்த சர்ச்சை நாயகன் பிரஃபுல் கோடா பட்டேலின்  சுருக்கமாக அவரின் வரலாற்றைக் கூறுகிறேன். புரிந்து கொள்ளுங்கள், இவர் குஜராத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதி மேலும் அமித்ஷா ஒரு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட பொழுது அவருக்கு பதில் மினிஸ்டர் ஆக பணியாற்றியவர். மேலும் 2019 தேர்தல் நடந்த பொழுது எலக்சன் கமிஷன் (election commission)நோட்டீஸ் கொடுக்கப்பட்ட முக்கிய புள்ளிகளில் ஒருவர் நம் சர்ச்சை நாயகன் அதேபோல் அதே 2019 நடந்த ஒரு கலவரத்தில் 90 அப்பாவி மக்களின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. முக்கிய பங்கு நம் சர்ச்சை நாயகனுக்கு உண்டு மேலும் பழங்குடி மக்களுக்காக போராடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்து கொண்டு தான் எழுதிய கடிதத்தில் அரசியல்வாதி ஒருவரின் பெயர் இடம் பெற்று இருந்தது அதுவும் நம் சர்ச்சை நாயகன் பெயர் தான்.
நான் கூறியது வெறும் ஒரு சில சிறு புள்ளிவிபரங்கள் தான் இப்படிப்பட்ட மாபெரும் வரலாற்றைக் கொண்ட நம் சர்ச்சை நாயகன் தான் காக்கப்பட வேண்டிய சொர்க்க பூமியான லட்சத்திற்கு அட்மினிஸ்டர்ட் ஆபீஸராக மத்திய அரசு நியமித்தது. இதில், குறிப்பிடத்தக்கவை அவர் வருவதற்கு முன்பு அங்கு ஒருவருக்கும் கொரோனா இல்லை. ஆனால், இன்று 700 பேருக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் அப்படியே இருக்கட்டும் மேலும், அவர் என்னென்ன மாற்றங்களை செய்தார் என்று புள்ளி விவரங்களாக கூறுகிறேன்.

  1. நான் மேல் கூறிய படி அங்கு வாழ்வது அதிகம் இஸ்லாமிய குடும்பங்கள் எனவே அங்கு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு அசைவ உணவை கொண்டு வரக்கூடாது என்று தடை விதித்துள்ளார், மேலும் மாட்டு இறைச்சி ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளார்.
  2. அங்கு வாழும் மக்கள் அதிகபட்சம் தங்கள் வாக்கு உரிமையால் பஞ்சாயத்து தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும் ஆனால் இப்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறியுள்ளார். (இதே சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வந்தால் இரண்டு குழந்தைகள் அல்ல இரண்டு மனைவிகளை கொண்ட தலைவர்கள் எங்கு செல்வார்கள் என்று தெரியவில்லை)
  3. அதே போல் வளர்ச்சி மசோதா என்று யார் வேண்டுமானாலும் லட்சத்தீவுகளின் நிலம் வாங்க உரிமை தந்துள்ளார். மேலும் யார் வேண்டுமானாலும் அங்குள்ள கனிம வளங்களை எடுத்து கொள்ளலாம் (mining, quarrying) என்று அனுமதி கொடுத்துள்ளார்.
  4. மேலும் 24 மணி நேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவ செவிலியர்கள் ஊதியம் உயர்த்தி கேட்டு போராடியதால் பணி நீக்கம் செய்தும் கைது செய்தும் அதிரடி நடவடிக்கை செய்து உள்ளார்.
  5. தனியார் மதுபான கடைகள் திறந்து கொள்ளலாம் என்றும் எங்கு வேணாலும் மது அருந்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி கொடுத்துள்ளார்.
  6. இந்தியாவில் குற்ற சட்டங்கள் மிகக் குறைவாக நடக்கும் இடத்தில் முதலிடம் லட்சத்தீவு ஆனால் அங்கு குண்டர் தடுப்பு சட்டத்தைக் (goondas act) இப்போது கொண்டு வந்துள்ளார். எனவே அவரை யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் அச்சட்டத்தின் கீழ் கைது செய்தால் ஒரு வருடத்திற்கு பிறகே நீதிமன்றத்தை நாட முடியும். இப்படி ஒரு குட்டி சர்வாதிகாரத்தை நிறுவியுள்ளார்.
    நம் சர்ச்சை நாயகன் பிரஃபுல் கோடா பட்டேல்.  நாம் அனைவரும் விழித்துக்கொண்டு எதிர்த்து கேள்வி கேட்டால் மட்டுமே இந்தியாவின் சொர்க்க பூமியான லட்சத்தீவை காத்திட முடியும். அங்கு வாழும் நம் இஸ்லாமிய சகோதரர்களை காத்திட முடியும். இன்று, நம் பக்கத்து வீட்டில் தான் நடக்கிறது என்று நாம் அமைதி கொண்டால், நாளை நம் வீட்டில் நடப்பதற்கு வெகு நாட்கள் ஆகாது.

கட்டுரை எழுதியவர் – லெனின் லோகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed