September 24, 2021

கோடுவேளி ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நாதபுரம் பகுதியில், எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் வடமதுரை கே.ரமேஷ், 3 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்கின், இயக்கத்தை துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கோடுவேலி ஊராட்சிக்குட்பட்ட லக்ஷ்மி நாதபுரம் திருவள்ளூர் செங்குன்றம் சாலை இடையே புதியதாக உயர் கோபுர மின் எல்லாபுரம் ஒன்றிய 19வது ஒன்றியக் குழு உறுப்பினர் கோடுவேலி
எம்.குழந்தைவேலு பொது நிதியிலிருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் வளக்கு இயக்க விழா ஒன்றிய குழு உறுப்பினர்
எம்.குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் வடமதுரை
கே.ரமேஷ், துணை பெரும் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டு ஸ்விட்ச் ஆன் செய்து உயர் கோபுர மின் விளக்கை இயக்கி வைத்தனர்.

பின்னர் ஒன்றிய குழு உறுப்பினர் குழந்தைவேலுவின் 39வது பிறந்த நாளை முன்னிட்டு காரணிபேட்டையில் பிறந்தநள் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானத்தை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒன்றியக்குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், துணை பெருந்தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்.

இதில் குருவாயில் தக்ஷிணாமூர்த்தி, தயாளன், ரவிச்சந்திரன், பிரகாஷ், சண்முகப்பிரியா மதன், வேலன், மெர்லின், முருகன்,
காஜா, முனுசாமி, ஞானசேகர், சக்கரவர்த்தி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed