September 24, 2021

ராஜபாளையத்தில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் இயக்கம் சார்பாக, தொடர்ந்து ஏழை மக்களுக்கு, உணவு வழங்கி வருகின்றனர்…

1 min read
Spread the love

விருதுநகர் மேற்கு மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பஸ் நிலையம் நேரு சலை பகுதியில் தளபதி பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் உத்தரவின் பேரில், ஒன்பதாம் நாளான இன்று மதிய உணவு வழங்கபட்டது. கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு மக்கள் இயக்கம் மூலமாக, தினமும் 100 நபருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட மகளிரணி தலைவி எஸ்.ஜெகா விஜய் , மற்றும் மகளிரணி மாவட்ட செயலாளர் பாண்டீஸ்வரி, சிவா விஜய் விருதுநகர் மேற்கு மாவட்ட தொண்டரணி துணைத் தலைவர், பூமாலை விஜய் விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர், ராமராஜ் இராஜபாளையம் நகர துணைத்தலைவர், முத்துக்கண்ணன் விருதுநகர் மேற்கு மாவட்ட தொண்டரணி துணை செயலாளர், நாராயணன், கலந்து கொண்டு மதிய உணவு வழங்கினார்கள்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed