September 24, 2021

கும்மிடிப்பூண்டியில்
7 ஊராட்சிகளில், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு, டி.ஜே.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ, நலதிட்ட உதவிகள் வழங்கினார்…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம், மாதர்பாக்கம் உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்த ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தில் கரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த 19 குடும்பத்திற்கு ஈமசடங்கு உதவி தொகை தலா 3ஆயிரம், அரிசி மளிகை உள்ளிட்ட நிவாரண உதவி, தூய்மை பணியாளர்கள் 15பேருக்கு நிவாரண உதவி, ஈகுவார்பாளையம் பகுதியை சேர்ந்த 1800 குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவி உள்ளிட்டவைகள் ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர் ஏற்பாட்டிலும், ஈகுவார்பாளையம் ஊராட்சி துணை தலைவர் சௌந்தரி மகேஷ், ஊராட்சி திமுக நிர்வாகிகள் பரத்குமார், கிருஷ்ணமூர்த்தி, லட்சுமி நாராயணன் முன்னிலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று கரோனா காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, சுமார் 2000 பேர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக ஒன்றிய குழு துணை செயலாளர் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி பங்கேற்றனர்.

தொடர்ந்து, நேமல்லூரில் மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி மனோகரன், காமராஜ், சேகர் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள், ஏழை எளியோர் என 100 பேருக்கு அரிசி மளிகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.
மாதர்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சீனிவாசன் ஏற்பாட்டில் அர்ச்சகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், ஏழை எளியோர் என 250பேருக்கும், பாதிரிவேட்டில், திமுக நிர்வாகி சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் சிட்டிபாபு ஏற்பாட்டில் 100பேர்களுக்கும்,

மாநெல்லூரில் ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன் ஏற்பாட்டில் ஊராட்சி தலைவர் லாரன்ஸ், திமுக நிர்வாகி ஏசுரத்தினம், வடிவேல் முன்னிலையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மத அர்ச்சகர்கள், இமாம்கள், போதகர்கள் 20பேர் மற்றும் 200ஏழை எளியோர்களுக்கு நிவாரண பொருட்களும், 500பேருக்கு அன்னதானமும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

அவ்வாறே போந்தவாக்கத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டிலும், பல்லவாடாவில் மாவட்ட கவுன்சிலர் சாரதம்மாள், மாவட்ட பிரதிநிதி முத்துசாமி ஏற்பாட்டிலும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ 500பேருக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed