August 1, 2021

பழவேற்காடு அடுத்த பசியாவரம் கிராமத்தில், உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்தது, மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஊராட்சியில் உள்ள பசியாவரம் கிராமத்தில் லெவன் கேஜ் எனப்படும் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. இதனால் மயிரிழையில் ஒரு குடும்பத்தினர் உயிர் தப்பினர். பசியாவரம் கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்ட இந்த மின்சார இணைப்பு லைன்கள் முழுவதும் தற்போது துண்டு துண்டாக இணைக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இது குறித்து மின்சார துறையினருக்கு பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் வாரிய அதிகாரிகள் இதுவரை இந்த இணைப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், இன்று காலை பசியாவரம் கிராமத்தை சேர்ந்த ராதிகா என்பவர் தூங்கி எழுந்து வீட்டுக்கு வெளியே வரும் போது வீட்டின் வாசலில் மின் வயர் ஒன்று அறுந்து விழுந்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு பதறி அடித்து மீண்டும் வீட்டுக்குள்ளே ஓடினார்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தவுடன் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன் சம்பந்தப்பட்ட மின்சார துறைக்கு தகவல் கூறினார். ஒரு மணி நேரம் ஆகியும் மின்சார துறையினர் அறுந்து விழுந்த மின் கம்பியை சரிசெய்யாமல் கிடப்பில் போட்டதால், கிராம மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
அதே பகுதியில் மற்றொரு லைனில் கிளாம்ப் உடைந்து விழுந்து விடும் நிலையில் தொங்கிக்கொண்டு இருப்பதால் இதனை உடனே மின்சார துறையினர் சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்திகள் – பூர்ண விஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *