September 23, 2021

இராஜபாளையத்தில், கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல் மாத ஊதியத்தில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார்…

1 min read
Spread the love

இராஜபாளையத்தில் கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல் மாத ஊதியத்தில் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார். இந்நிகழ்வில், பேசிய அவர் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளி என மாற்றி அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அவர்களின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய பெருமை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை சேரும் எனவும்,

அவர் வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு மாற்று திறனாளிகளின் வளர்ச்சிக்கு தனிக்கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட செயல்படுகிறார் என கூறினார், மேலும், இராஜபாளையம் தொகுதியில் தான் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்த்தெடுக்கப்பட்ட உடன் மாற்று திறனாளிகளின் நலனுக்காக முதல் மாத ஊதியத்திலிருந்து 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கியுள்ளேன் என கூறினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் அவர்களின் வளர்ச்சிக்கு தொழில் தொடங்கவோ அல்லது உதவித்தொகை பெறவும் தான் நேரடியாக அலுவலகத்திற்கே வந்து ஆவண செய்து பெற்றுதருவதாகவும் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் அவர்களும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களும் தொழில்த்துறை அமைச்சர் அவர்களும் எம்.பி அவர்களும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும் உறுதுணையாக இருப்போம் எனக்கூறினார்.

இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் கிளைச்செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed