June 21, 2021

பொன்னேரி, மீஞ்சூர் பகுதி பெட்ரோல் பங்க்குகள் எதிரில், பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம்…

1 min read

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்
ராகுல் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆலோசனையின் பேரில், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்க்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் மற்றும்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் சிதம்பரம் அவர்களின் மேற்பார்வையில்,
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன்படி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர், பட்டமந்திரி பகுதிகளில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமையிலும், டி.எல். சதாசிவலிங்கம் முன்னிலையிலும், பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து ஏற்றி வரும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன் பொன்னேரியில் ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் அவர்கள் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் டி.எல். சதாசிவலிங்கம்
கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்

.

இதில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாககள் சுரேந்தர், பிரகாசம் கோவர்தன், விஸ்டம் சம்பத் , மற்றும் நிர்வாகிகள் ஹரிஹரன் , ஜான் திருவருட்செல்வன், பூபாலன், G.பாலாஜி, செந்தில், தியாகராஜன் விமல் ,பாலாஜி, செல்வம், அசோக் குமார் , குணசேகரன், மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன்- 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed