July 28, 2021

தூத்துக்குடியில், வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று, தலைமறைவாக இருந்தவர் கைது…

1 min read

கடந்த மார்ச் 26 ம் தேதி அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தை வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அவர்களது 9 வயது சிறுமியிடம் தூத்துக்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) என்பவர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இது குறித்து மேற்படி சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி தென்பாகம் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (12.06.2021) பழைய பேருந்து நிலையம் அருகில் ரோந்து சென்ற போது, போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற சதீஷ்குமாரை கைது செய்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ஜெயந்தி அவர்கள் விசாரணை மேற்கொண்டு சதீஷ்குமாரை தூத்துக்குடி போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *