November 27, 2021

பழவேற்காட்டில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக பழவேற்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆர் பி எஸ் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழவேற்காடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முகம்மது உசேன், முகம்மது சுல்தான், பீர் முகமது, அப்துல்லா,கோவிந்து, பார்த்தலோமியா, அபூபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed