July 28, 2021

புழல் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து; கண்டன ஆர்பாட்டம்…

1 min read

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்,  பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர்  ஆலோசனைபடி,  கிராண்ட்லையன் ஊராட்சி அருகே உள்ள பெட்ரோல்  வங்கி எதிரே புழல் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில்  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புழல் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் நித்தியானந்தம் தலைமையில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த  ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட    காங்கிரஸ் பொறுப்பாளர்கள்  மத்திய அரசுக்கு எதிராக உடனடியாக பதவி விலகக்கோரியும், பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் திருவள்ளூர் மாவட்ட மகளிரணி செயலாளர் தீனால் பாஸ்கர், வட்டார துணை செயலாளர் உதயராஜ், தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ராஜன்,   உட்பட நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பாரத்குமார் 
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *