July 28, 2021

அதிக வேகமாக பரவிய கோரோனா இரண்டாவது அலையை, 30 நாளில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் தான் என, அமைச்சர் சா.மு நாசர் பெருமிதம்…

1 min read

ஆட்சி பொறுப்பேற்று 30 நாட்களிலேயே அதிவேகமாக பரவிய கொரோனா இரண்டாவது அலை சங்கிலி தொடரை, இந்தியாவிலேயே, அதைவிட வேகத்தில் கட்டுப்படுத்திய பெருமை, தமிழக முதல்வருக்கு மட்டும் தான் உண்டு. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பெருமிதம்,

திருமழிசை பேரூராட்சி, குண்டுமேடு பகுதியில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில், அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். திமுக பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி ஆகியோர் வரவேற்றனர். ஒன்றியக்குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயகுமார், மாவட்ட ஊராட்சி குழு துணை பெருந்தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து, பிறகு திமுக பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி ஏற்பாட்டில் ஊரடங்கை முன்னிட்டு 2 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த ஆட்சி காலத்தில் கொரோனா சங்கிலி தொடரை ஒரு சதவீதம் கூட குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கே அந்த ஆட்சியாளர்கள் அதிக அளவில் திணறிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், தற்போது தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பேற்று 30 நாட்களிலேயே, அதிவேகமாக பரவிய கொடூர கொரோனாவின் இரண்டாவது அலை சங்கிலி தொடரை, இந்தியா அளவில் தமிழகத்தில் மட்டும், அதைவிட வேகமாக போர்க்கால அடிப்படையில் தீவிரமாக செயல்பட்டு கொரோனாவை அடக்கிய பெருமை தமிழக முதல்வருக்கு மட்டும் தான் உண்டு. அந்த அளவிற்கு மக்களுக்காக தன்னை அர்ப்பணைத்து கொண்டவர். கொரோனாவை கட்டுபடுத்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் பந்தைய குதிரை வேகத்தில் பணியாற்றிய தன் காரணமாக இன்று தமிழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் பெருமைபடுகின்ற, பொறாமைபடுகின்ற அளவிற்கு இன்றைய தினம் தமிழக முதல்வர் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதனை சாமாளிக்கிற சக்தி தமிழக முதல்வரிடம் உள்ளது. தற்போது கொரோனா தொற்று 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. தந்தை 8 அடி பாய்ந்தால் அவர் பெற்றெடுத்த பிள்ளை 16 அடி பாய்ந்து நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திமுக நிர்வாகிகள் ஜெ.மகாதேவன், உ.வடிவேல், வி.எம்.நாகதாஸ், மு.குமார், தி.கோ.செல்வம், ஆர்.கருணாநிதி, மு.சுரேந்தர், கங்காதரன், எழிலரசன், இளங்கோவன், ஜான்மேத்யூ, சதீஷ், ஜெயகுரு, டி.கே.வேலு, முருகன், மோகன், நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *