October 24, 2021

சோழவரம் வாட்டாரத்தில், தமிழ்நாடு நிலைக்கதக்க மானாவரி வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், கோடை உழவு பணி துவக்கம்…

1 min read
Spread the love

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சோழவரம் வட்டாரம் ஜெகநாதபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நிலைக்கதக்க மானாவரி வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் மானாவரி மற்றும் தரிசு நிலங்களை டாபே ட்ராக்டர் கம்பெனி மூலமாக வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன் தலைமையில் கோடை உழவு பணி துவக்கி வைக்கப்பட்டது.

சோழவரம் வட்டாரத்தில் இத்திட்டத்தின் கீழ் 200 எக்டர் விவாசாயிகளின் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் தொழிற்நுட்பங்களை பற்றியும் கோடை உழவு மற்றும் இடுப்பொருட்கள் விநியோகம் மானியத்திலும் இப்பணியில் பணிமுடிவு மானியமாக அளிக்கப்படும் என விரிவாக எடுத்து கூறினர். இதில் வேளாண்மை அலுவலர் ஸ்ரீதேவி, துணை அலுவலர் செந்தில்முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரியங்கா,  மணி, ஜாய்சி, செல்வி, ரமேஷ் உட்பட விவசாயிகள் பங்கேற்றனர்.

செய்தியாளர் – ப.பாரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed