October 24, 2021

தூத்துக்குடியில், டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக-வினர் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்… டாஸ்மாக்

1 min read
Spread the love

தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் மாதம் 14ம் தேதி முதல் 21ம் தேதி காலை 6-00 மணி வரை ஒரு வாரத்துக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று அதிகம் பாதித்துள்ள 11 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே இது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னரே பாமக தலைவர் ராமதாஸ், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில், தற்போது மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ள அரசின் முடிவை எதிர்த்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகள் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் டூவிபுரத்தில் உள்ள தனது வீடு முன்பு தனது குடும்பத்தினருடன் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கடந்த ”அதிமுக ஆட்சியின் போது அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த முக.ஸ்டாலின் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அதிமுக அரசை எதிர்த்து அப்போது வீடுகள் முன்பு கொரோனா பரவல் நேரத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்.

இந்நிலையில், தற்போது நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதால் தற்போது குறைந்துள்ள கொரோனா தொற்றானது அதன் மூலம் அதிகரிக்கும் எனவே முதல்வர் இம்முடிவை பரீசீலனை செய்ய வேண்டும் என்றார். இதில், மாவட்ட செயலாளர் மான்சிங், கிழக்கு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் – இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed