August 6, 2021

பொன்னேரி, சின்ன காவனமத்தில் அமைந்துள்ள வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தின், 8 ஆம் ஆண்டு விழா…

1 min read

பொன்னேரி அருகே சின்னக் காவனமத்தில் அமைந்துள்ள வள்ளலார் தாயார்
சின்னம்மையார் இல்லத்தின், 8 ஆம் ஆண்டு விழாவை முள்ளிட்டு, நேற்று அன்னதான தருமச்சாலையில் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு பொன்னேரி வட்டாரம் சின்னக் காவனம் கிராமத்தை சுற்றி அமைந்துள்ள ஏலியம்பேடு, வேலூர், நெய்தவாயல், பெரியகாவனம், பள்ளிக்குப்பம், குடிநெல்வாயல், கருங்குழி, உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து மதிய உணவு வழங்கங்கபட்டு வருகிறது. ஏறத்தாழ 3000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த கொரானா கொற்றின் இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்து உள்ள இந்த காலகட்டத்தில் சென்ற ஆண்டு 2020 மார்ச் 25ந் தேதி தொடங்கி இன்று வரை தொடர்ந்து 435 நாட்களாக இடைவிடாமல் ஏழை எளிய மக்களுக்கு வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் அன்னதானம் தினந்தோறும் நடைபெறுவது, அப்பகுதி கிராம மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது. அதனால், தினமும் ஏழை எளிய மக்கள் ஏறத்தாழ 500 பேர் பசி தீர்ந்து வருகின்றார்.

கொரானா காய்ச்சல் பரவாமல் இருக்க வேண்டி, சித்தர்கள் குறிப்புகளில் இருந்து 18 மூலிகைகள் சேர்த்து மூலிகை கஞ்சி தினமும் காலையில் 1000 பேருக்கு வழங்குகிறது. அதேபோல் கபசுர குடிநீர் மற்றும் மூலிகை கசாயம் 435 நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கி வருகிறது.

அது மட்டும் இல்லாமல், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கி அவர்கள் துயரத்தை போக்கி வருகின்றனர். கொரானா நோயாளிகளுக்கு அரசு அங்கிகாரம் பெற்ற சித்த வைத்தியர் மூலம் மருந்து வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை ஏழை எளிய மக்களுக்கு கண்பார்வை பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் – பூர்ண விஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed