August 6, 2021

மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், கொரோனோவை கட்டுப்படுத்த, தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது…

1 min read

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தாக்கம் அதிகம் ஏற்பட்டு உள்ளதால், தமிழக அரசு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில் கொரோனாவின் இரண்டாவது அலையில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய விதமாக, பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பொன்னேரி மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில், சிலர் பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். ஒரு சிலர் தொற்றில் இருந்து மீண்டாலும், அவர்கள் உடலில் ஏற்கனவே இருக்கக்கூடிய இணை நோயினால் பாதிப்படைந்த பலர் உயிர் இழக்கும் சூழ்நிலையும் உருவானது.

இந்நிலையில், அனுப்பம்பட்டு ஊராட்சியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டி, ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி அம்மாள் மீஞ்சூர் வட்டார சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேஷ் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஊராட்சியில் உள்ள மக்களுக்கு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு அளித்து வருகின்றனர்.

மேலும் ஊராட்சிகளில் அனைத்து மக்களையும் சுகாதாரத்துறையினர் உதவியுடன் ஊராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர், மேலும், ஊராட்சியில் தொற்றுக்களை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களுக்கு, கூட்டுறவு சங்கத் தலைவர் உமாமகேஸ்வரன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் ஊராட்சி முழுவதும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மேலும், அதன்படி இன்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 200க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன் அடைந்துள்ளனர். அதேபோல், ஊராட்சி முழுவதும் கொரோனா தொற்று கிருமியை ஒழிக்கும் விதமாக, சென்னையில் உள்ள “கருடா ஏரோஸ்பேஸ்” என்றும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன், ட்ரோன் இயந்திரங்களை கொண்டு, ஊராட்சி முழுவதும் உள்ள அனுப்பம்பட்டு, பெரிய அனுப்பம்பட்டு, உதண்டி கண்டிகை, உட்பட அனைத்து பகுதிகளிலும் தெருக்கள் மற்றும் வீடுகளின் சுற்றுப்புறங்களிலும் உள்ள கிருமிகளை ஒழிக்கும் விதமாக, கிருமிநாசினிகள் தெளித்து வருகின்றனர்.

செய்தியாளர் – பூர்ண விஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed