October 24, 2021

திருவண்ணாமலையில் கொரோனாவிற்கு பிறகு பள்ளிகளில் சேர்க்கைகள் துவங்கி நடைபெற்று வருகிறது…

1 min read
Spread the love

கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களுடைய கல்வித்தரம் அதிக அளவில் பாதிக்கப்பட்ட சூழ்நிலை நிலவியதால், ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந் நிலையில் ஜனவரி மாதத்திற்கு பிறகு பள்ளிகள் தொடங்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவியதால், தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதனால் அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில், தற்போது தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.அதன்படி, திருவண்ணாமலை
நகராட்சி பேகோபுரத்தெரு ஆரம்ப பள்ளியில் இன்று (14:6:2021) வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed