October 24, 2021

ஆரணி பேரூராட்சி பகுதியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட முன்கள பணியாளர்களுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நிவாரண பொருட்களை வழங்கினார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆரணி பேரூராட்சியில் பணி புரியும் சுமார் 60 முன் களப் பணியாளர்களுக்கு அரிசி, முகக்கவசம், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த கொரோனா இரண்டாம் கட்ட நிவாரணம் ரூபாய் 2,000 மற்றும் 14 விதமான மளிகை பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

பின்னர் ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கொரோனா பாதிப்பு குறித்து தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்த பின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முன்னெடுக்க ஆலோசனைகளை நடத்தினார்.

மேலும், ஆரணி பேரூராட்சிக்கு உட்பட்ட தமிழ் காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தருவதாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உறுதியளித்தார். இதில், ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed