August 6, 2021

கும்மிடிப்பூண்டியில் பஜாரில், போக்குவத்து நெரிசலை குறைக்க, டி.ஜே.கோவந்தராஜன் எம்.எல்.ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்…

1 min read

கும்மிடிப்பூண்டி பஜாரில் சாலையை ஆக்ரமித்து 161 சாலையோர கடைகள் உள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டி பஜாரில் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு பேருந்துகள் போக்குவரத்து பஜார் வழியே செல்லாமல் பைபாஸ் சாலை வழியே சென்றுவிடுகிறது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்த நிலையில் இது குறித்து கும்மிடிப்பூண்டி நகர மக்கள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதை தொடர்ந்து, அப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கும் விதமாக நெடுஞ்சாலையை ஆக்ரமித்துள்ள சாலையோர 161 கடைகளை அகற்றி மாற்று இடத்தில் அவர்களுக்கு கடை நடத்த இடம் ஒதுக்குவது குறித்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நிகழ்விற்கு பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் டிஎஸ்பி எஸ்.ரித்து, கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் கதிர்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன், நெடுஞ்சாலைதுறை உதவி செயற்பொறியாளர் டில்லிபாபு, அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் , சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிககள், கட்டிட உரிமையாளர்கள் சங்கத்தினர், திமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ், தமாகா, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து வியாபாரிகள் சங்கம், கட்டிட உரிமையாளர் சங்கம், மற்றும் அனைத்து கட்சியினர் கூட்டத்தில் 161 சாலையோர கடைகளை இடமாற்றம் செய்வதும் குறித்தும் மாற்று இடங்கள் குறித்தும் தங்கள் கருத்துகளை வழங்கினர்.

இறுதியில், பேசிய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், ” கும்மிடிப்பூண்டி நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கும்மிடிப்பூண்டி பஜாரில் கட்டிட உரிமையாளர்களுக்கும், சாலையோர வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடு செய்து கும்மிடிப்பூண்டி பஜாரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்து அரசு பேருந்துகள் கும்மிடிப்பூண்டி பஜார் வழியே வர அனைத்து கட்சியினர் ஒத்துழைப்போடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed