July 28, 2021

திருவண்ணாமலையில் கொரோனா சிறப்பு நிவாரண தொகை-மளிகை பொருட்கள் விநியோகத்தை அமைச்சர் ஏ.வ.வேலு துவக்கி வைத்தார்…

1 min read

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும் , கொரோனா காலத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழர் குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி முதல்கட்டமாக
தலா ஒரு குடும்ப அட்டைதாரருக்கு தலாரூ.2000 விதம் 1633 நியாயவிலை கடைகள் மூலம் மொத்தம் 7லட்சத்து 60ஆயிரத்து 743குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.152கோடியே14 லட்சத்து86 ஆயிரம் வழங்கப்பட்டது .

இதைத்தொடர்ந்து
2-வது முறையாக ஒரு குடும்ப அட்டைதாரருக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ரேஷன் கடை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.

இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு கொரோனா சிறப்பு நிவாரண நிதி மற்றும்
14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார். அதனை டோக்கன்படி
பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 187 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 7லட்சத்து 61 ஆயிரத்து 281 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி 2-ம் தவணையாக ரூ. 2000 ரொக்கம் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது . கொரோனா நிவாரண நிதிக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.52 கோடியே 25 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

இந்த நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரைஎம்.பி,
எம்.எல்.ஏக்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் ,நகரச் செயலாளர் கார்த்தி வேல்மாறன் , மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனுவாசன், மாவட்ட கவுன்சிலர் சரவணன்,வேங்கிகால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ் செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் திருவண்ணாமலை பேகோபுரதெருவில் உள்ள ரேஷன் கடை உள்பட பல்வேறு ரேஷன் கடைகளிலும் கொரோனா சிறப்பு நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *