August 3, 2021

புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில், கொரோனா இரண்டாம் தவனை நிவாரண பொருட்களை சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்…

1 min read

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தொற்றின் தாக்கத்தை குறைக்க வேண்டி, தமிழக அரசு முழு ஊரடங்கிற்க்கு உத்தரவிட்டிருந்தது. அதனால், மக்கள் வேலை வாய்ப்பின்றி தங்கள் வாழ்வாதாரம் இழந்து இருந்த சூழ்நிலையில், அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 4 ஆயிரம் நிவாரண தொகையும், நிவாரண மளிகைப் பொருட்களையும் வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி,
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மாதவரம் சட்டமன்ற தொகுதி புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகரை  ஊராட்சியில்,  கொரோனா இரண்டாம் அலையினால் அரசு அறிவித்த ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்துள்ள வடகரை ஊராட்சி மக்களுக்கு இரண்டாவது தவனையாக நியாயவிலை கடையில்,  தமிழக அரசு வழங்கும் 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கும் நிகழ்ச்சி  வடகரை  ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர்  ஜானகிராமன்  தலைமையில் நடைபெற்றது.

அதில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் அவர்கள் கலந்து கொண்டு  கொரோனா இரண்டாம் தவனை நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் புழல்  ஒன்றிய செயலாளர் நா.ஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், வழக்கறிஞர் திராவிடடில்லி   உட்பட பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர். 

செய்தியாளர் – ப.பாரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed