July 28, 2021

சோழவரம் ஒன்றியம் காரனோடை ஊராட்சியில், தூய்மை காவலர்களுக்கு நிவாரணப் பொருட்களை மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ வழங்கினார்…

1 min read

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க தமிழக முதல்வர் அவர்கள் வலியுறுத்தி இருந்தார். அதன்படி, சோழவரம் தெற்கு ஒன்றியம் காரனோடை ஊராட்சியில், கொரோனா இரண்டாம் அலையின் போது ஊராட்சியில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காரனோடை ஊராட்சி மன்றத் தலைவர் சுலோச்சனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட,
சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான  மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்கள் கொரோனா சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு முககவசம், உள்ளிட்ட பாதுகாப்பு பொருள்கள் மற்றும் அரிசி,  காய்கறிகள்  போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். இந் நிகழ்ச்சியில், ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு  துணை பெருந்தலைவருமான மீ.வே.கர்ணாகரன், மற்றும் சோழவரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உட்பட  கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர் – ப.பாரத்குமார் 
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *