August 6, 2021

தமிழக செய்தித் துறை வலிமை பெற்ற சங்கங்களை கண்டு அச்சம் அடைகின்றதா…

1 min read

தமிழகத்தில் செயல்படும் வலிமையான சங்கம் எது? எந்த சங்கத்தில் எத்தனை பத்திரிகையாளர்கள் இருக்கின்றார்கள் ?
தொழிலாளர் நல வாரியத்தில் வரவு செலவு கணக்குகளையும், உறுப்பினர்களின் முழு விவரங்களையும் பட்டியலோடு ஒவ்வொரு ஆண்டும் ஒப்படைத்து வருவது யார் ?முறையாக தேர்தல், மாநாடு, போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், நலத்திட்டங்கள் இவைகளை தொடர்ந்து செய்து வருபவர்கள் யார் ?
லெட்டர் பேடு அமைப்புகள் யார் ?
எந்த ஆட்சி வந்தாலும் உடனே அவர்களின் காலை பிடிப்பவர்கள் யார் ?தன்மானத்தோடும், சுயமரியாதையோடும், துணிச்சலுடன் எந்த ஆட்சியாக இருந்தாலும் உண்மை நிலையை எடுத்துச் செல்லும் சுயநலமற்ற சங்கம் எது ?

இது போன்ற எதுவுமே தெரியாத ஒரு துறை, அதற்கு அதிகாரிகள் ! இவர்கள் தரும் தகவல்களை பின்பற்றி ஓய்வூதியம் வழங்கும் குழு, அக்கிரிட்டேஷன் வழங்கும் குழு, இதில் நலவாரியம் வருவதாக எதிர்பார்ப்புகள் வேறு !
இந்த குழுவில் எப்படி இவர்கள் தகுதி உள்ளவர்களை பரிந்துரை செய்வார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது ! பொறுப்பில் உள்ளவர்களுக்கு செய்தி வாசிப்பவர்களுக்கும், செய்தியாளர்களுக்குமே வித்யாசம் தெரியவில்லை என்பது கொடுமையின் உச்சம் !

கடந்த அ.தி.மு.க ஆட்சியில்,பத்து ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த செய்தித் துறையை வீழ்த்தும் விதமாக, உண்மையான பத்திரிகையாளர் சங்கங்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது தற்போது உள்ள இந்த செய்தித் துறை ! அ.தி.மு.க ஆட்சியில் எந்த ஒரு நல்ல திட்டங்களும் செய்யவில்லை என்றாலும், இப்படி உண்மையான வலிமையான சங்கங்களை அவமதித்தது இல்லை ! மூத்த பத்திரிகையாளர், பத்திரிகையாளர்களின் பிதா மகன் டாக்டர் கலைஞர் வழியில் வந்த ஆட்சியில் பத்திரிகை சங்கங்களுக்கு ஏற்பட்ட அவமானம் இது ! இதற்கான விளக்கம் அளிக்க வேண்டிய கடமை செய்தித் துறை இயக்குனர் அவர்களுக்கு உள்ளது

!

மாண்புமிகு முதல்வர் அவர்கள் பல நல்ல திட்டங்களை பத்திரிகையாளர்களுக்கு செய்து வரும் நிலையில், அவைகள் முறையாக சென்று அடைய செய்தித் துறை செயல்பட வேண்டும் ! ஏற்கனவே காலம் கடந்து பல பி.ஆர்.ஓக்கள் வேலையில் இருந்து கொண்டு, செய்தியாளர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர் ! ஒரு சில பி.ஆர்.ஓக்கள் தவிர பலர் தங்கள் பணிகளை சரிவர செய்வது இல்லை, இந்த சூழலில் தலைநகரில் இயங்கும் செய்தித் துறை நிலை இப்படி உள்ளது ! செய்தித் துறை இயக்குனர் அவர்கள் இதற்கான விளக்கம் தருவார் என்று நம்புகிறோம் !

தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
9444111494

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed