July 28, 2021

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெ.மேகநாத ரெட்டி அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்…

1 min read

பெருநகர சென்னை மாநகராட்சி(பணிகள்) துணை ஆணையராக பணியாற்றி வந்த ஜெ.மேகநாதரெட்டி, அவர்கள் தமிழக அரசின் அரசாணைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார். 02.09.2013-ல் இந்திய அரசின் குடிமை பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்டம், மேட்டூரில் டிசம்பர் – 2015 முதல் பிப்ரவரி – 2018-ம் ஆண்டு வரை சார் ஆட்சியராக பணியாற்றினார்.

பிப்ரவரி 2018 முதல் செப்டம்பர் – 2018-ம் ஆண்டு வரை நில நிர்வாகத்துறை இணை ஆணையாளராக பணியாற்றியுள்ளார். செப்டம்பர் – 2018 முதல் மார்ச் – 2020-ம் ஆண்டு வரை வணிகவரித்துறை இணை ஆணையாளராகவும், மார்ச் – 2020 முதல் மே – 2021-ம் ஆண்டு வரை பெருநகர சென்னை மாநாகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையாளராகவும், செப்டம்பர் – 2020 முதல் மே – 2021-ம் ஆண்டு வரை பெருநகர சென்னை மாநாகராட்சி (பணிகள்) துணை ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக 17.06.2021 பொறுப்பேற்றுக்கொண்டார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *