July 28, 2021

சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 6வாரங்களில் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு…

1 min read

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கில் ஹசன் முகமது ஜின்னா, கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பின், 2 அதிகாரிகளிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டதாகவும் , அதன் அடிப்படையில் 5 அதிகாரிகளிடமும் 2 பிற சாட்சிகளிடம் விசாரணை செய்து, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், ஊரடங்கு காரணமாக தடயவியல் அறிக்கையைப் பெற முடியவில்லை எனவும் தெரிவித்தார். தடயவியல் அறிக்கை மூன்று வாரங்களில் கிடைத்துவிடும் என்பதால், புலன் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என, கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புலன்விசாரணை அதிகாரி கேட்டுக்கொண்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாக குழு, தனது அறிக்கையை ஏற்கனவே ஒரு உள்துறை செயலாளரிடம் சமர்ப்பித்து விட்டதாகவும் , அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 6வாரங்களில் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *