July 28, 2021

செங்குன்றத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில், அன்னதானத்தை அறக்கட்டளையின் தலைவர் இளவரசி வழங்கினார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கண்ணிகைபேர் பகுதியில் இயங்கி வரும் அன்னை தெரேசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவரும் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஊத்துக்கோட்டை தாசில்தாருமான டாக்டர் இளவரசி அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தன் பணியை விருப்ப ஓய்வு பெற்றார்.

பின்னர் தொடர்ந்து பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகின்றார். மேலும், இவருடன் செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு, பொருளாளர் பிரின்ஸ், ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந் நிலையில் செங்குன்றத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 130 பேருக்கு இந்த அறக்கட்டளை மூலம் உணவு தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் இளவரசி வழங்கினார் நிகழ்ச்சியின்போது செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு, பொருளாளர் பிரின்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருண்குமார் மிகச் சிறப்பாக செய்திருந்தார். இவர்கள் செய்யும் சமூக சேவையை கண்டு பல்வேறு தரப்பில் மக்கள் சமூக ஆர்வலர்கள் இவர் செய்து வரும் சமூக பணியை பார்த்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், அறக்கட்டளையின் தலைவர் இளவரசி கூறுகையில், எந்த பகுதியில் உதவி என்று கேட்டாலும் எங்கள் அறக்கட்டளை மூலம் செய்வதற்கு நான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *