October 24, 2021

தூத்துக்குடி வடபாகம் பகுதியில், கொலை உப்பட, 29 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 4 பேரை கைது செய்த, தனிப்படையினருக்கு, எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டு…

1 min read
Spread the love

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் அனைத்து உட்கோட்டங்களிலும், அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து கொலை, கொள்ளை, ரவுடித்தனம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற அனைத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கடந்த 5 மாதங்களில் மட்டும் 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மட்டக்கடை பஜார் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மட்டக்கடை வடக்கு ,பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மரிய அந்தோணி சகிலன் (24), குருஸ்புரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (24), மட்டக்கடை வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த சிம்சன் (25) மற்றும் எஸ்.எஸ். பிள்ளை தெருவைச் சேர்ந்த சந்தனகுமார் (33) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில், இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் உட்பட 29 வழக்குகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் ரவுடித்தனம் செய்து, ஒருவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 அரிவாள் மற்றும் 2 கத்திகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கைது செய்யப்பட்டுள்ள எதிரிகளில் மரிய அந்தோணி சகிலன் மீது தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், மத்தியபாகம், சிப்காட் மற்றும் ஏரல் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உட்பட 11 வழக்குகளிலும், மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் மீது தூத்துக்குடி வடபாகம், சிப்காட் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை, கொலை மிரட்டல், உட்பட 8 வழக்குகளிலும், சிம்சன் மீது தூத்துக்குடி வடபாகம், தூத்துக்குடி தென்பாகம், ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உட்பட 10 வழக்குகளில் ஈடுபட்டதும் குறிப்பிடதக்கது.
இவர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed