October 24, 2021

ராஜபாளையம் கிராம ஊராட்சிகளில், வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்து, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை…

1 min read
Spread the love

இராஜபாளையம் ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் குடிநீர் விநியோகம் குறித்தும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில், ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ் அவர்கள் மற்றும் தாமிரபரணி குடிநீர் திட்ட மேற்பார்வை பொறியாளர் முத்துபழனியப்பன் அவர்கள் முன்னிலையிலும், இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பேசிய, எம்.எல்.ஏ அவர்கள், இராஜபாளையம் கிராம பகுதிகளில் தாமிரபரணி குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கு உடனடியாக தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் என்னிடம் வைத்த கோரிக்கையான தாமிரபரணி குடிநீரை போர் தண்ணீருடன் கலந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதனை, தாமிரபரணி குடிநீருக்கு என தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைத்து தாமிரபரணி குடிநீரை தனியாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து தருமாறும், அதனை தான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு அனுமதி பெற்று வருவதாக மேற்பார்வை பொறியாளர் அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பொறியாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து தருவதாக உறுதி அளித்தார் மேலும் இராஜபாளையம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்க புதிய சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த தமிழக முதல்வர் அவர்களிடம் வலியுறுத்தி நிதி பெற்று உறுதியாக சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒன்றிய குழு துணை தலைவர் துரைகற்பகராஜ், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சத்தியமூர்த்தி, தாமிரபரணி குடிநீர் திட்ட பொறியாளரகள் கென்னடி, உதவி பொறியாளர் ப்ரியதர்ஷினி, ராமசுப்பிரமணியன் ஒன்றிய பொறியாளர்கள் ராமமுனீஸ்வரன், மாலதி, வைரபிரகாஷம் மற்றும் தாமிரபரணி குடிநீர் திட்ட உதவி பொறியாளர்கள் ஊராட்சி செயலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed