August 6, 2021

ஆரணியில், ராகுல் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சி, தூய்மை காவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணியில் ஆரணி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தியின் 50 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு இனிப்பு சேலை மற்றும் பிரியாணி உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சுகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 50 முன்கள பணியாளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் சேலைகள் மற்றும் ஆரணி காவல்துறையினருக்கு
முக கவசம் கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சம்பத், மாநில வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் அருண்பிரசாத், ஆரணி நகர காங்கிரஸ் தலைவர் அருண், ஆரணி பேரூராட்சி தலைவர்
ஹேமாபூசனம், திமுக ஆரணி முன்னாள் நகர செயலாளர் கண்ணதாசன், ரமேஷ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed