July 28, 2021

மாதவரத்தில், மதுக் கடைகள் திறப்பதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

1 min read

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஆணைக்கிணங்க , கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டிதும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடை முறைப்படுத்த வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதே போல், திருவள்ளூர் மத்திய மாவட்டம் பாமக சார்பிலும், மாதவரம் பகுதியில் உள்ள சீதாபதி தெருவில் மாவட்ட செயலாளர் எஸ்.ஞானபிரகாசம் தலைமையில் மதுக்கடைகளை திறப்பதற்க்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதில், மது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கருப்பு கொடிகளை ஏந்தியப்படி தமிழக அரசை கண்டித்து அறபோராட்டம் நடை பெற்றது.

இதில் பகுதி செயலாளர் பாஸ்கர், இளைஞரணி மாவட்ட செயலாளர் டி.எஸ்.பாபு, பகுதி துணை செயலாளர்கள் ஜெகன்குமார், விஜி, வட்ட செயலாளர் சரவணன், பகுதி பிரிதிநிதி ரமேஷ், பகுதி பொருளாளர் திலகவதி, ஏமந்த், கோவர்த்தன் உட்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ப.பாரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *