November 27, 2021

மீஞ்சூர் ஒன்றியத்தில் சமூக நலத்துறையின் மூலம், 82 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ, டி.ஜே கோவிந்தராஜன் வழங்கினார்…

1 min read
Spread the love

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் திருமணத்தின் போதும், மகப்பேறு காலத்திலும், அவர்களுக்கு உதவும் வகையில் பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வழங்கி வந்தார். அதேபோல் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கும் மறுவாழ்வு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி இருந்தார். அவைகள் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது தமிழக அரசால் அந்த திட்டங்கள் அனைத்தும் இன்றளவும் சில, சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் சமூக நலத்துறையின் மூலம், 82 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன் மூலம் தையல் இயந்திரங்கள் மற்றும் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், திருமண உதவித்தொகை காசோலைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமை வகித்தார். மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ரவி, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் , மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே எஸ் கோவிந்தராஜன் 82 பயனாளிகளுக்கும் தையல் எந்திரங்கள் தாலிக்கு தங்கம், மற்றும் திருமண உதவித்தொகை காசோலைகள், போன்ற நலதிட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மேலும், மேலூர் நிலவழகன், தமிழன் இளங்கோவன், கோளூர் கதிரவன், டாக்டர் பரிமளம், மீஞ்சூர் மோகன்ராஜ், தன்சிங், தமிழரசன், கதிரவன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed