August 6, 2021

திருவண்ணாமலையில், நள்ளிரவில் சப்-இன்ஸ்பெக்டர் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு, போலீசார் தீவிர விசாரணை…

1 min read

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர் திருவண்ணாமலை மத்தள குளத் தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் , சுந்தர் வீட்டின் முன்பு நிறுத்தபட்டு இருந்த கார் தீப்பற்றி எரிந்தது. அதனால் அவரது வீட்டின் சுவர் கரும்புகை படர்ந்து காணப்படுகிறது.
இன்று காலை தெரியவந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் அதிர்ச்சியடைந்தார்.

தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்கள் யார்? என்பது அவருக்கு தெரிய வில்லை. தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. என்பதை புரிந்து கொண்ட அவர், இதுபற்றி இன்று காலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக குற்றவாளிகள் யாரும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணையில் காரை பெட்ரோல் ஊற்றி எரித்தது, குடும்பத்தகராறு சம்பந்தமாக நடந்திருப்பது தெரியவந்தது. அதிலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, சப் இன்ஸ்பெக்டர் சுந்தரின் இரண்டாவது மனைவி என்பதும், தெரியவந்துள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த இந்த சம்பவம் பற்றி இன்று காலை தெரியவந்ததும், அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இது தொடர்பாக சதி செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed