October 24, 2021

பழவேற்காட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) அறக்கட்டளை ஏற்பாட்டில், 1400 பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பழங்குடி கிராம மக்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ)அறக்கட்டளை சார்பில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. கோவிட் -19 காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் சி.எல்.பி இந்தியா பிரைவேட் லிமிடெட் அரசாங்கத்துடன் இணைந்து நாடு முழுவதும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி பழவேற்காடு பகுதியில் வசிக்கும் 1400 பழங்குடி இன மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களாக 10 கிலோ அரிசி, மளிகை சாமான்கள், கபசுர குடிநீர், முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிவாரணப் பொருட்களை பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் பழங்குடி மக்களுக்கு சமூக இடைவெளியுடன் வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளன நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், மீனவகிராம நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed