July 28, 2021

மீஞ்சூர் ஒன்றியம், அண்ணாமலைச்சேரி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட அண்ணாமலைச்சேரி கிராமத்தில் நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் இருந்த தெருக்களின் சாலைகள் மற்றும் கழிவுநீர் சாக்கடைகளை பார்வையிட வேண்டி கிராம மக்கள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில், இன்று அவர் அண்ணாமலைச்சேரி கிராமத்தில் நேரில் சென்று, பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் தெருக்களை பார்வையிட்டு சாலைகள் அமைப்பதற்கும் கழிவு நீரை முறையாக வெளியேற்றுவதற்கும் ஆலோசனை செய்தார்.

பின் பொன்னேரியில் இருந்து புதுச்சேரிமேடு வழியாக அண்ணாமலை சேரிக்கு வந்து சென்ற பேருந்து தடங்களை மீண்டும் கொண்டு வருவதற்கு கிராம நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆய்வின் போது திமுக ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தாடப்பெரும்பாக்கம் ராஜா, தமிழரசன், ஆறுமுகம், மற்றும் அண்ணாமலைச்சேரி கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *