August 6, 2021

திருவண்ணாமலையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஜாதி பிரிவினையை உருவாக்க நினைக்கும், ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்…

1 min read

“மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்” என்ற வேலைவாய்ப்பு திட்டம் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள ஒரு திட்டமாகும் இந்தத் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டு ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வந்த நிலையில் தற்போது அந்த திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்

கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு புதிய உத்தரவு பிறப்பித்து, அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில், ” இந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பயனாளிகள் பெயர் பட்டியல் மற்றும் ஊதிய பட்டியல்களை சாதி வாரியாக பிரித்து அனுப்ப வேண்டும் ” என அறிவிக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

இதனைக் கண்டித்து,
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளில் சாதி வாரியாக பிரிவினையை ஏற்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின் முயற்சியை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மேற்கண்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed